loading
25 February 2020
Register Here
வாங்க, வளருவோம்!

வணக்கம்,
ஸ்டார்ட் அப் பிசினஸ் நியூஸ். காம்

உலகின் மூத்த மொழியாம் இனிமைத் தமிழில் மலரும் முதல் ஸ்டார்ட்அப் பிசினஸ் நியூஸ் செய்தி மடல். இது மின்னிதழாகவும் மலர இருக்கிறது.

இந்திய அளவில், தொழில் துறையில், தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாடு முதல் இடம் பெற பல புதிய நிறுவனங்கள், அதுவும் ஸ்டார்ட் அப் துறைகளில் தொடங்கப்பட வேண்டும். அதற்கு ஆர்வமிக்க தமிழ் இளைஞர்கள், தொழில் செய்பவர்கள் ஸ்டார்ட் அப் தொடர்பாக செய்திகளை தாய்மொழியில் தெரிந்துகொள்வது அவசியம்.

அந்த உன்னத பணியை கையில் எடுத்துள்ளது ஸ்டார்ட் அப் பிசினஸ் நியூஸ். காம் (www.StartupBusinessNews.Com). சிறந்த வங்கியாளர்கள், வணிக எழுத்தாளர்கள், வணிக வெற்றியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்களால் இந்த இணைய கட்டுரைகள் மற்றும் இந்த செய்தி மடல் உருப்பெற உள்ளது.

சர்வதேச அளவில், இந்திய அளவில் நடைபெறும் ஸ்டார்ட் அப் (புதிய தொழில் முயற்சிகள்) தொடர்பான செய்திகளை, எளிய தமிழில், தொடர்ந்து உங்களுக்கு வழங்க இருக்கிறது.

ஸ்டார்ட் அப் இயக்கம் நமது பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களால் 2016ம் வருடம் தொடங்கப் பெற்றது. மாநில அளவிலும் ஸ்டார்ட் அப் பாலிசிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஸ்டார்ட் அப் என்றால் என்ன? என்னென்ன கம்பெனிகள் ஸ்டார்ட் அப்-பின் கீழ் வரும்? ஸ்டார்ட் அப் தொடங்க, அரசாங்க, வங்கி, தனியார் கடன்கள் / உதவிகள் எப்படி கிடைக்கும்? தயாரிக்கும் பொருட்களை எப்படி விற்பது? என்றெல்லாம் இந்த இணையத்தில் இதழ்தோறும் பூக்கப்போகிறது.

புதிய தொழில் முயற்சிகள் குறித்து பத்திரிகைகளில் எழுதுபவரும், பிரபல வர்த்தக எழுத்தாளருமான திரு. சேதுராமன் சாத்தப்பன் இந்த இணையதளத்துக்கு தொடர்ந்து கட்டுரைகள் வழங்கி, வாசகர்களுடன் உரையாட இருக்கிறார்.

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் (கோவை), கிருஷ்ணா (சென்னை), பிரேமா நாராயணன் (சென்னை), செசி (மதுரை), திவ்யா ராமசாமி (பெங்களூர்), ஹுமாயூன் (சிதம்பரம்), ஏ வினைதீர்த்தான் செந்தில் (சென்னை), மீனாட்சி சுந்தரம் (ஹோசூர்) போன்ற பிரபல எழுத்தாளர்கள் பலரும் தரமான கட்டுரைகள், பேட்டிகள் தரவுள்ளார்கள்.

மிக எளிதாக இனி ஸ்டார்ட் அப் தொழில் சம்பந்தமான செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.

இந்த முக்கியமான தருணத்தில், வாசகராகிய உங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்றால், உங்கள் ஊரில் சிறப்பாக தொழில் செய்து வரும் வளரும் தொழிலதிபர்களை ஸ்டார்ட் அப் பிசினஸ் நியூஸ். காம் எங்களது இணையதளத்திற்கு மற்றும் செய்தி மடலுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் வெற்றிக் கதைகள், பேட்டிகள் நமது இணையதளத்தில், செய்தி மடலில் வெளிவரும். அது வளரும் இளைஞர்களை ஊக்குவிக்கும்.

இந்த மின்னிதழ், முதல் இதழிலேயே 10,000 வியாபாரிகள், தொழில் அதிபர்கள், மாணவர்கள், கல்லூரிகள் ஆகியோரை அடையும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த 6 மாதத்தில் அது ஒரு லட்சம் பேரை சென்றடையும் விதத்தில் இருக்கும்.

தொழிலதிபர்கள், தொழில் முனைவோர், வணிகர்கள், இளைஞர்களை நேரடியாக சென்றடையும். எனவே எமது இணைய பக்கத்தில் அல்லது இந்த மின்னிதழில் விளம்பரம் செய்வது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

இந்த இதழ் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்க www.StartupBusinessNews.Com என்ற இணையதளத்தில் உங்கள் இமெயில் முகவரியை பதிவு செய்து கொள்ளவும்.

அன்புடன்
ஸ்டார்ட் அப் பிசினஸ் நியூஸ். காம் குழுவினர்